ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதநேய உதவியாக 2000 டன் கோதுமை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
அமிர்தசரஸ் அடுத்த வாகா எல்லை தாண்டி பாகிஸ்தான் வழியாக சரக்கு வாகனங்களில் கோதுமை மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 50 ஆயிரம் டன் கோதுமை அனுப்பி வைக்க ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வாக்களித்துள்ளது. 2000 டன் வீதம் நேற்று நான்காவது தவணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . இதுவரை 8,000 டன் கோதுமை அனுப்பப்பட்டுள்ளது. இந்த கோதுமை மூட்டைகளை ஏற்றிச் சென்ற ஆப்கானிஸ்தான் வாகன ஓட்டுனர்கள் இந்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர்.