மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் வைத்து மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடைபெற்றது. இதில் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். அதில் முதல் பரிசை எரியூர் வளையப்பட்டி அணியும், 2-வது பரிசை குமாரபட்டி அணியும், 3-வது பரிசை காரைக்குடி அணியும், 4-வது பரிசை ராஜராஜன் பொறியியல் கல்லூரி அணியும் பெற்றுள்ளது.
இதனையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா ரொக்க பரிசுகளை வழங்கியுள்ளார். மேலும் இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் வருகின்ற 18-ம் தேதி தென்காசி மாவட்டத்தில் நடைபெறுகின்ற மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கு பெறுவார்கள் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.