ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது குடும்ப ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் மாதந்தோறும் 350 ரூபாய் பிடிப்பதாகவும், மருத்துவ செலவுகளுக்கு கிடைக்கும் இழப்பீடு குறைவாக உள்ளதாகவும்,எனவே இழப்பீடு வழங்க கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட துணைத்தலைவர் ராமநாதன் மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், மாவட்ட செயலாளர் நடராஜன், ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.