மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆனைகுடி அழகிரி நாதன் பேட்டை கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அய்யப்பன் கும்பகோணத்தை சேர்ந்த தனது நண்பர் கவுதமன் என்பவருடன் சேர்ந்து ஆனைகுடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ நிலைதடுமாறி அய்யப்பனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யப்பன்மற்றும் கவுதமன் ஆகிய 2 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.