ஆதிதிராவினர் நலத்துறை அறிவித்தபடி இலவச வீட்டுமனை வழங்ககோரி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்து பூலாங்குளம் என்ற கிராமம் உள்ளது. இந்நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டில் ஆதிதிராவினர் நலத்துறை சார்பில் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு இலவச வீட்டுமனை ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் அப்பகுதியில் முறையாக இடம் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக அப்பகுதியினர் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்நிலையில் பூலாங்குளம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவகத்தை முற்றுகையிட்டுள்ளனர். மேலும் வீட்டுமனை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஆதிதிராவினர் நல தனி வட்டாட்சியர் சேதுராமனிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதனையடுத்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்த பின்னரே பொதுமக்கள் களைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.