Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றதால்…. பொதுமக்கள் திடீர் மறியல்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

வனத்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றதால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள எம்.ஆர்.டி நகரில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடங்களை பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றுள்ளனர். அப்போது பொதுமக்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த கூட்டம் ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் வைத்து நடந்துள்ளது. அப்போது பொதுமக்களிடம் பேசிய மாவட்ட வனத்துறை அதிகாரி பகான்ஜெகதீஷ் சுதாகர், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை பொதுமக்களும் ஏற்றுக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்போது உதவி வனபாதுகாவலர் கணேசலிங்கம், ஏ.எஸ்.பி. தீபக், தாசில்தார் மார்ட்டின், ராமேசுவரம் நகரசபை தலைவர் நாசர் கான், துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் நகர சபை தலைவர் அர்ஜூனன், அ.தி.மு.க. நகர செயலாளர் கே.கே.அர்ஜுனன், எம்.ஆர்.டி. நகர் நகர்தலைவர் முனியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Categories

Tech |