Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“நள்ளிரவு நேரம்” நண்பர்களுக்கு நேர்ந்த கொடூரம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எழில் என்ற மகன் இருந்துள்ளார். இதே பகுதியில் தினேஷ்குமார், பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவார். இந்நிலையில் தினேஷ், எழில், பிரகாஷ் ஆகிய 3 பேரும் நள்ளிரவு நேரத்தில் திருக்கோவிலூர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில்  சென்றுள்ளனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த வேன் ஒன்று இருசக்கர வாகனத்தின்  மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் எழில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருடன் வந்த தினேஷ் மற்றும் பிரகாஷ் ஆகியோர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை  மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரகாஷை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருக்கோவிலூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் எழிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |