Categories
சினிமா தமிழ் சினிமா

OTT யில் ரிலீசாகும் விக்ரம் பிரபுவின் படம்….. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…..!!!

டாணாக்காரன் திரைப்படம் நேரடியாக OTT யில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம்பிரபு. இவர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கும்கி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனையடுத்து இவர் நடிப்பில் அரிமா நம்பி, இது என்ன மாயம், இவன் வேற மாதிரி, அசுரகுரு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Taanakkaran' starring Vikram Prabhu; The story of students joining police  training || விக்ரம் பிரபு நடிக்கும் 'டாணாக்காரன்'; போலீஸ் பயிற்சியில்  சேரும் மாணவர்களின் கதை

இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”டாணாக்காரன்”. இந்த படத்தில் அஞ்சலி நாயர், எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படம் விரைவில் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT யில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |