அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே குளத்தூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜேந்திரன் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். எனவே வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ராஜேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சுசீந்திரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.