மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழமடவிளாகம் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரேவதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கார்த்திகேயன் நேற்று வேலையை முடித்துவிட்டு திருவையாறு சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த லாரி திடீரென கார்த்திகேயனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திகேயனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.