Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான செம குட் நியூஸ்….பழைய முறைப்படி வினியோகம்…!!!

ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற கைரேகை பதிவு வேலை செய்யாவிட்டால், பழைய முறைப்படி விநியோகம் செய்யலாம் என கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்திலுள்ள நியாயவிலைக் கடைகளின் மூலம் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களை ரேஷன் அட்டைதாரர்கள் குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அரிசி மட்டும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஸ்மார்ட் கார்டு அறிமுகமான பின் குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் யாராவது நேரில் வந்து தங்களது கைரேகை பதிவு செய்யும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. மேலும் இந்த பயோமெட்ரிக் கைரேகை பதிவு செய்யும் முறையில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

ஏனென்றால் கைரேகை சரியாக பதிவதில்லை. இதனால் வயதானவர்கள் ரேஷன் கடைகளுக்கு வந்தும், பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து ரேஷன் கடை ஊழியர்கள் கைரேகை பதிவை புதுப்பித்து வருமாறு அவர்களை அலைக்கழிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஆகவே இது தொடர்பாக தமிழக கூட்டுறவு துறை ரேஷன் கடைகளுக்கு பலமுறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனாலும் இன்னும் கைரேகை பதிவாகவில்லை என காரணம் கூறி ரேஷன் அட்டைதாரர்கள் அலைக்கழிக்களிக்கப்படுவதாக பல புகார்கள் வருகின்றன.

இந்த நிலையில் இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளதாவது, ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவானது சரியாக வேலை செய்யாவிட்டால், பழைய முறைப்படி அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யலாம் என தமிழக கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த காரணம் கொண்டும் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதில் தடை ஏற்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |