Categories
தேசிய செய்திகள்

மதுரைக்கு வந்த ஆளுநர்….. சொன்ன இனிப்பான செய்தி… அது என்ன தெரியுமா..??

காரைக்குடி கம்பன் கழக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தெலுங்கானா ஆளுனர்  தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து உள்ளார். உலகிலேயே சில நாடுகளில் மட்டுமே குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்த ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதில்  குழந்தை தடுப்பூசி செலுத்துவதில் மிகப்பெரிய சாதனை படைத்த பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், எனவும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

மேலும் கொரோனா குறைந்தால் தடுப்பூசி போட வேண்டாம் என்பது இல்லாமல் தடுப்பூசி போட்டால் தான் கொரோனா  இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.  வருகிற 20-ஆம் தேதி முதல் பொது விமான சேவை தொடங்க இருக்கிறது. அரசுப் பள்ளிகளின்  தரம் உயர்வு எல்லோரும் அரசுப் பள்ளிகளைத் தேடி வர வேண்டும். அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் போன்றவை தரம் உயர்த்த வேண்டும்.

மேலும் தமிழகத்தில் பெண்களுக்கான திட்டங்களை நிறைய செயல்படுத்த படுவதைப் போல புதுச்சேரியில் செய்யப்படுமா என்கிற கேள்விக்கு புதுச்சேரியில் நல்ல பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது. ஒரு அரசு மாதிரி மற்றொரு  அரசு இருக்க முடியாது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Categories

Tech |