Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” பல்வேறு கோரிக்கைகள்…. ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…‌.!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பாக பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் சடையாண்டி தலைமை தாங்கியுள்ளார். இதற்கு செயலாளர் ராமசாமி, மாவட்ட மின்சாரத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஜவஹர் மற்றும் பொருளாளர் தங்கவேலு என பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி உள்ளனர். அப்போது ஆர்ப்பாட்டம் பற்றி சங்க நிர்வாகிகள் கூறியதாவது, மருத்துவ காப்பீட்டுக்கு மாதந்தோறும் தலா 350 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகின்றது.

இதனால் வருடத்திற்கு ஒருவருக்கு 4,700 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படியாக மாதம் 300 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து மொத்தம் இருக்கும் ஓய்வூதியர்கள் 10% கூட மருத்துவ காப்பீடு மூலமாக பயன் அடைவதில்லை. ஆதலால் ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் இருக்கும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என கூறியுள்ளனர்.

Categories

Tech |