தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் குறித்து புரிதல் இல்லாமல் விமர்சனம் செய்துள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை எண்ணூர் அனல் மின் நிலையம் விரிவாக்கம் குறித்து சமீபத்தில் விமர்சனம் செய்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலைக்கு அனல்மின் நிலையம் விரிவாக்க திட்டம் குறித்து புரிதல் இல்லை. அதனால் அவருக்கு அவப்பெயர் உண்டாகும் விதமாக விமர்சனம் செய்துள்ளார்.
மின்வாரிய ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை நன்கு அறிந்தே விமர்சிக்க வேண்டும். என அண்ணாமலை தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் பற்றி 24 மணி நேரத்தில் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கடந்த திமுக ஆட்சியில் மின்வெட்டு ஏற்பட முக்கிய காரணம் பிஜிஆர் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தது தான் என அண்ணாமலை குறிப்பிட்டதற்கு செந்தில்பாலாஜி இவ்வாறு பதிலளித்துள்ளார்.