Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மூதாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய எம்.எல்.ஏ. … நெகிழ்ச்சி சம்பவம் ..!

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் வறுமையில் தவித்த மூதாட்டிக்கு எம்.எல்.ஏ. உதவிக்கரம் நீட்டியுள்ளது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற குறைதீர் முகாமில்,” 72 வயதான மூதாட்டி ஒருவர் தன்னிடம் 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், அதை மாற்ற முடியாமல் சாப்பிடுவதற்குக் கூட வழியின்றி தவித்து வருவதாகவும், இந்த பணத்தை வைத்துக் கொண்டு மாற்று பணம் வழங்க வேண்டும்,” என்றும் கோரிக்கை விடுத்து கண்ணீர் மல்க மனு அளித்துச் சென்றார்.

இதுகுறித்து, பத்திரிகைகள், தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதைக் கவனித்த அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்டச் செயலாளருமான ஏ.பி. நந்தகுமார், “மூதாட்டி புவனேஸ்வரியை வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து மூதாட்டியிடம் இருந்த செல்லாத (பழைய) 500 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக, புழக்கத்தில் உள்ள புதிய 500 ரூபாய் நோட்டுகளில் 12 ஆயிரம் ரூபாய் வழங்கினார்

மேலும், மூதாட்டியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க வேலூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார். எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார் மூதாட்டிக்கு செய்த செயல் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |