Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு பாத்துக்கோங்க…. இதோ லிஸ்ட்….!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (17-03-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம்:

பூத்தமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை பூத்தமேடு, கொய்யாத்தோப்பு, தென்னமாதேவி, சுப்பம்பேட்டை, அய்யன்கோவில்பட்டு, டி.மேட்டுப்பாளையம், சானாந்தோப்பு, சோழகனுார், சோழம்பூண்டி, எடப்பாளையம், ஆரியூர், சாணிமேடு, ஒரத்துார், தும்பூர் தாங்கல், அசோகபுரி, உலகலாம்பூண்டி, கஸ்பாகாரணை, பூண்டி, வேம்பி, ஆசாரங்குப்பம், வெங்கந்துார் போன்ற பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.

கன்னியாகுமரி மாவட்டம்:

நாகர்கோவில் மின் கோட்டத்திற்கு உட்பட்ட வெட்டூர்ணிமடம், பள்ளி விளை, ரெயில்வே நகர், பள்ளிவிளை சானல் கரை, அன்புநகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் உள்ள மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (17-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

கோவை மாவட்டம்:

மேட்டுப்பாளையம் நேரம்: காலை, 9:00 முதல், 4:00 மணி வரை.மேட்டுப்பாளையம், சிறுமுகை சுற்றுப்புற பகுதிகள், ஆலாங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம்.தகவல் : சேகர் செயற்பொறியாளர், மேட்டுப்பாளையம்.

மதுரை மாவட்டம்:

காலை 10:00 — மதியம் 2:00 மணி வரை மதுரை எம்.எம்.சி.காலனி, சி.ஏ.எஸ்.நகர், சொக்கு பிள்ளை நகர், பைபாஸ் ரோடு, ஜெயபாரத் சிட்டி, அவனியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, மதுரா, மல்லிகை குடியிருப்புகள், பிரியங்கா அவென்யூ, அர்ஜூனா நகர், கிளாட்வே கிரீன் சிட்டி, வி.ஓ.சி., தெரு, பராசக்தி நகர், காவேரி நகர் 1 — 7 தெரு, ஆறுமுக நகர் 1,2 தெரு, ஜவஹர் நகர், ஸ்ரீராம் நகர், எம்.எம்.சிட்டி.

Categories

Tech |