Categories
உலக செய்திகள்

சூப்பர் நியூஸ்…. “உக்ரைனுக்கு பல கோடி செலவில் உபகரண பொருட்கள்”…. பிரபல நாடு அறிவிப்பு….!!!

 தென் கொரியா 100 கோடி வோன் மதிப்பில் 20  உபகரணங்கள் உக்ரைனுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவ உபகரணங்களை வழங்க உள்ளதாக தென்கொரியா நேற்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தென் கொரியா நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சக பத்திரிகையாளர் போ சியூங் சான்  கூறுகையில். “உக்ரைனுக்கு 12 உபகரணங்கள், போர் வகைகள், ராணுவத்துக்கு தேவைப்படும் பொருட்களான தலைக்கவசம், உணவு மற்றும் மருத்துவம் போன்ற மொத்தம் 20  உபகரணங்கள் வழங்கப்படும். இந்த பொருட்கள் மொத்தம்  100 கோடி வோன் ஆகும். இந்த நிலையில் ராணுவ விமானங்கள் மூலம் பொருட்கள் இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் விமானம் படை மற்றும் கடற்படைகளுடன் நேரடி தகவல்களை பரிமாறிக்கொள்ள தொலைதொடர்பு நெட்வொர்க் இரு நாடுகளுக்கும் இடையே பரிசோதனை முடிந்த பின்னர் முறையாக தென்கொரிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கும்” என்று கூறியுள்ளார்

Categories

Tech |