மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பற்றி பிரியா ஆனந்த் பேசும்போது கண் கலங்கிவிட்டார்.
கன்னட சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். இவர் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் திடீர் உயிரிழப்பு ரசிகர்கள் திரையுலகினர் என அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவர் இறப்பதற்கு முன் கடைசியாக நடித்துக்கொண்டு இருந்த திரைப்படம் ஜேம்ஸ். இந்த படம் இன்று ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்திருக்கின்றார். இந்நிலையில் அண்மையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பிரியா ஆனந்த் கூறியுள்ளதாவது, “புனித் ராஜ்குமார் சினிமாவில் மட்டும் அல்லாமல் ரியல் லைப்பிலும் அவர் ஹீரோதான். அவருடன் திரைப் படத்தில் நடிக்கும்போது எனக்கு கன்னட வார்த்தைகளையும் இங்குள்ள கோயில்களையும் மற்றும் உணவுகளைப் பற்றியும் கூறினார்.
நான் சந்தித்ததிலேயே மிகப்பெரிய தாக்கத்தை என்னிடம் ஏற்படுத்தியவர் புனித் ராஜ்குமார் தான். வெற்றியினால் தலைகணம் ஏறாமல் மற்றவர்களிடம் இயல்பாகப் பழகக் கூடிய தன்மையை அவரிடம் தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் நல்ல மகனாக தந்தையாக கணவராக இருந்தார். நான் எங்கு பார்த்தாலும் அவர் என்னை பார்த்து சிரிப்பது போலவே தோன்றுகிறது என மனமுருகி கூறியுள்ளார். இந்த பேட்டியில் ப்ரியா ஆனந்த், புனித் ராஜ்குமாரை பற்றி பேசும் போது கண்ணீர் விட்டு அழுது விட்டார்.