ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று பழைய பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரக்கூடும். பணம் எவ்வளவு வந்தாலும் உடனடியாக விரயம் ஏற்படும். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்லபடியாக நடந்தேறும். இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம் அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு வாகனம் தொடர்பான செலவுகள் கொஞ்சம் இருக்கும்.
பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும். உறவினர்களிடம் கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகயிருக்கும். அதுமட்டுமில்லாமல் சக பணியாளர்கள் உங்களுக்கு தொல்லை தருவதாக இருந்தால் கொஞ்சம் சற்று விலகி இருப்பது ரொம்ப நல்லது. இன்று தெய்விக நம்பிக்கை கூடும், ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். கரு நீல நிறம் அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம் மற்றும் மஞ்சள் நிறம்