Categories
உலக செய்திகள்

OMG….!! “நோய் தொற்று பரவும் அபாயம்”…. உக்ரைன் மருத்துவர்களின் பரபரப்பு தகவல்….!!!

ரஷ்ய படையினர் உக்ரைனின் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டடு மழை நீரையும், பணியையும் சேகரித்து குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உயிருக்கு பயந்து பொது மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். இதனை தொடர்ந்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனைகள் மீது நடத்திய தாக்குதலால் மருந்துப் பொருட்கள் இல்லாமல் வருத்தகங்களும் மூட வேண்டிய நிலை மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான மருத்துவங்கள் கிடைக்காமலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் ரஷ்ய படையினர் உக்ரைனின் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மழை நீரையும், பணியையும் சேகரித்து மக்களுக்கு சுத்தமான தண்ணீரை மருத்துவ அமைப்பினர் வழங்கி வருகின்றனர்.

இது தொடர்பாக மருத்துவர்களுக்கான அவசர திட்ட மேலாளர் கேட் வைட் கூறியதாவது. “உக்ரேனில் முன்னதாகவே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி குறைந்த அளவில் இருந்தன. இந்த நிலையில் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க நாடுகளைப் போல அதிகமானோர் நோய் எதிர்ப்பு சக்தியை  பெரும் அளவுக்கு தடுப்பூசியை மக்கள் போடவில்லை. மேலும் சுகாதார பாதுகாப்பு அமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலையால் நோய்த்தடுப்பு எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்” என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து மருத்துவர்கள் கூறுகையில். “மக்கள் உயிருக்கு பயந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள சுகாதார நிலையங்கள், அடித்தளங்கள் மற்றும் தற்காலிக தங்குமிடங்களில் இருக்கும் நிலையில் அங்கு சுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் சரியாக கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு காலரா, போலியா மற்றும் தட்டம்மை போன்ற வயிற்றுப்போக்கு நோய்கள் அதிகரிக்கும்” என்று கூறியுள்ளனர்

Categories

Tech |