Categories
உலக செய்திகள்

கடும் விலையேற்றம்… இலங்கையில் அரசை எதிர்த்து போராட்டம்…. அதிபரின் உருவபொம்மை எரிப்பு…!!!

இலங்கையில் கடும் நிதி நெருக்கடியால் அதிபரின் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள்  ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

இலங்கை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டுடன் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் மின்வெட்டும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், பெட்ரோல் விலையும் கடுமையாக அதிகரித்திருக்கிறது. மேலும், அந்நாட்டில் எரிவாயு சிலிண்டருக்கு கடுமையாக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

இதனால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இலங்கை வரலாற்றிலேயே கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பது மக்களுக்கு அதிபர் கோட்டபாய ராஜபக்சே மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே, நேற்று அதிபர் மாளிகையை சுற்றிவளைத்த மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

தலைநகர் கொழும்பில் பல வீதிகளை போராட்டக்காரர்கள் முடக்கியுள்ளனர். எரிபொருள் பற்றாக்குறையால் பொது போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனினும், தலைநகரின் மையப்பகுதியில் மக்கள் குவிந்திருக்கிறார்கள்.

இலங்கை அரசை எதிர்த்து மக்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தியதோடு அதிபரின் உருவபொம்மையை எரித்துள்ளார்கள். மேலும் தடுக்க வந்த காவல்துறையினருடன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சண்டை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி போர்க்களமாக மாறியுள்ளது.

Categories

Tech |