கடகம் ராசி அன்பர்களே…!! இன்று நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும். அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். கூடுமானவரை அனைத்து காரியத்தையும் இன்று சிறப்பாக செய்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இன்று புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் உண்டாகும். பெண்கள் சிறிய அளவில் நன்மையையும் பொறுமையும் பெறக்கூடிய காலகட்டமாக இன்றைய நாள் இருக்கும். வேண்டிய அளவில் அனைத்து விஷயங்களும் கிடைக்கும். இன்று லாபமும் சன்மானமும் உங்களுக்கு உயரும் நாளாகவே இருக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். கருநீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் கருநீலம்