மாணவர்கள் தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட்டு பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள் வைத்துள்ளார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டு உயிரை இழந்துள்ளனர். பெற்றோர் உங்களை நம்பித்தான் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களின் சொத்து. தற்கொலை எண்ணம் தோன்றினால் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இவரிடம் போன் வாயிலாக ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் 1098 மற்றும் தற்கொலை தடுப்பு உதவி மையத்தை 9152987821 என்ற எண்ணின் அழைத்துக் கொள்ளலாம். மேலும் icallhelpline.org என்ற இணையதள உதவியை பெற்றுக் கொள்ளலாம் என அதில் கூறப் பட்டிருக்கிறது.
Categories