பாவனா மலையாள திரையுலகில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாவனா. இவர் தமிழ் சினிமாவில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கூடல்நகர், வெயில், தீபாவளி போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இவர் கடைசியாக அஜித்துடன் ‘அசல்’ திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு பாவனா கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து வந்தார். திருமணத்துக்கு பிறகும் இவர் ஒரு சில கன்னடப் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தற்போது ஐந்து வருடத்திற்குப் பிறகு மீண்டும் மலையாள திரையுலகில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.