9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்தையா. இவர் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுமி தன் பெற்றோரிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறி உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் முத்தையாவின் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது . இது குறித்து தகவல் அறிந்த போலீஸ்சார் மருத்துவமனைக்கு விரைந்து முத்தையாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.