”SK 20” படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இதனை தொடர்ந்து இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் இவர் நடித்தது வரும் திரைப்படம் ”SK 20”. தமன் இசையமைக்கும் இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களை சந்தித்துள்ளார்.
. Today Fans Meet #Sivakarthikeyan na ❤ #PrinceSk #Sivakarthikeyan #Ayalaan https://t.co/IQqGXN2Syx
— • Chichilubu Sk👽💙❼ (@guruawesome) March 15, 2022