Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இது எல்லாம் நிறைவேற்ற வேண்டும்…. பெற்றோர்கள் அளித்த மனு…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

மாவட்ட கல்வி அதிகாரியிடம் மாணவர்களின் பெற்றோர்  கோரிக்கை மனு ஒன்றை  அளித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் அரசு பள்ளி மாணவர்களின்  பெற்றோர்கள்   கோரிக்கை மனு ஒன்றை அதிகாரிகளிடம் அளித்துள்ளனர். அந்த மனுவில் மன்னார்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் எல்.கே.ஜி.முதல் 5-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி வகுப்புகள் நடந்து  வருகிறது. இந்த வகுப்புகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மொத்தம் உள்ள 7 வகுப்புகளுக்கும் 3 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

மேலும் பள்ளியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் போதிய அளவில் இல்லை எனவும், எல். கே. ஜி, யு.கே.ஜி, வகுப்புகளுக்கு வாரம் ஒரு நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறுவதாகவும் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு வாரத்தில் 2 நாட்களும், 3,4 மற்றும் 5-ஆம்  வகுப்புகளுக்கு வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே போதிய ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்வதாக அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Categories

Tech |