Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் மர்ம காய்ச்சல்…. இதுதான் அறிகுறிகள்…. ஆய்வுப் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள்….!!

திருநெல்வேலி மாவட்டம் நெல்லை மாநகராட்சி பகுதிகளில்  கொரோனா தொற்று வேகமாக குறைந்துள்ளதால் மக்கள் அனைவரும் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளனர்.  இந்நிலையில் மர்ம காய்ச்சல் பரவி வருவது தெரியவந்துள்ளது. இந்த காய்ச்சல் பகலில் குறைவாகவும் இரவில் அதிகமான உடல் வெப்பநிலையும் கொண்டு காணப்படுகிறது. தலைவலி, இருமல், மயக்கம் போன்ற அறிகுறிகள் இருப்பதாக தெரிய வந்ததோடு இந்த பாதிப்புடன் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தற்போது நெல்லை மாநகராட்சியில் இந்த மர்ம காய்ச்சலினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மேலப்பாளையம் ராஜா நகரை சேர்ந்த ராதா என்பவர் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பொது மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோன்று, பாளையங்கோட்டை உருத்திராபதி நாயனார் பகுதியை சேர்ந்தவர் முருகன் இவர் சாலையில்  நடந்து சென்ற போது மயங்கி விழுந்துள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த மர்ம காய்ச்சலினால் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுகாதாரத் துறை அதிகாரிகள் மருத்துவமனைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

Categories

Tech |