சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள மல்லி அருணாசலபுரம் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது 26 மூட்டைகளில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வீட்டு உரிமையாளரான விக்னேஸ்வரன் மற்றும் நவநீதன் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.