Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இந்த திருமணத்தில் உடன்பாடில்லை” காதல் ஜோடி தஞ்சம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூரில் சௌந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜான்சி என்பவருக்கும் இடையே பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர்.

இதனை அடுத்து பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதியினர் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் இருவரின் பெற்றோர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஆனால் சவுந்தரராஜனின் பெற்றோர் வரவில்லை. இதனை அடுத்து ஜான்சியின் பெற்றோர் தங்களது மகளின் திருமணத்தில் உடன்பாடில்லை என காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி இருவரும் அவர்களது விருப்பம் போல் வாழலாம் என அறிவுறுத்தி காவல்துறையினர் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |