புதிய வேலைவாய்ப்பு மையம் திறக்கப்பட்டு இருப்பது இளைஞர்கள் மற்றும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் சார்பாக மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தொழில் முனைவோராக தங்களின் திறமைகளை வளர்த்து படிப்புடன் கூடிய வேலைவாய்ப்பு மாணவர்களே உருவாக்குவதற்காக புதிய முயற்சியில் பேராசிரியர் துணைகொண்டு செயின்ட் ஜோசப் தடுக்க சிறப்பு மையம் திறப்பு மற்றும் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் செயலர் அருட்தந்தை முனைவர் பீட்டர், முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் போன்றோர் மையத்தை திறந்து வைத்துள்ளனர்.
இதில் சிறப்பு விருந்தினராக தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உள்ள முதன்மையர் முத்துக்குமார் கலந்து கொண்டு இந்தத் திட்டத்தைப் பற்றி பாராட்டியுள்ளார். விரிவாக்கத் துறை இயக்குனர் அருட் தந்தை பெர்க்மான்ஸ் இவ்விழாவினை ஒருங்கிணைப்பு செய்திருக்கிறார். கல்லூரி நிர்வாகத்தின் சிறு முதலீட்டில் மாணவர்களின் தொழில் திறனை வளர்த்துக் கொள்ளவும், ஆய்வு செய்யும் பொருட்களை புதிய தொழில்நுட்ப உத்திகளை கொண்டு உருவாக்குவதற்கும், உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யவும் அதில் வரும் வருமானத்தை கொண்டு தங்களை முன்னேற்றப் படுத்திக் கொள்ளவும், நேரத்தை சரியான வகையில் பயன்படுத்தவும், பகுதிநேரப் பணியாகவும், சுயதொழில் முனைவோராகவும் இத்திட்டமானது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
விரிவாக்கத் துறை மற்றும் வேதியல், இயற்பியல், தாவரவியல், மனிதவள மேம்பாடு, வணிகவியல், தகவல் தொழில்நுட்பம், அறிவியல், மின்னணுவியல் போன்ற துறைகள் இணைந்து முருங்கை இலை பொடி சூரணம் வகைகள், மின்காந்த சுழற்சி கருவி, எல் இ டி விளக்கு பெயர்ப்பலகை, பூச்செண்டு, கண்ணாடி ஓவியங்கள், கை சுத்திகரிப்பான் கிருமிநாசினியுடன் கூடிய வெப்ப நிலையை அறியும் கருவி, டெலஸ்கோப் இயற்கை உரங்கள் போன்றவை மாணவர்களால் உற்பத்தி செய்யப்பட்டு தகுதியான தரம் மற்றும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தரவு பகுப்பாய்வு, இணையத்தள மேம்பாடு, ஜிஎஸ்டி தாக்கல், மாணவர்களுக்கான தொழில் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவையும் இந்த மையத்தில் செயல்படுத்தப்படுகிறது. இந்நிகழ்வில் பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.