முப்படைகளிலும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்காக மத்திய அரசு கடந்த 2015 இல் அமல்படுத்திய “ஒரே பதவி ஒரே ஓய்வூதிய கொள்கை” செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து இந்திய ஓய்வு பெற்ற வீரர்கள் இயக்கம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் நீதிபதிகள் இதை டி.ஒய் சந்திர சூட், சூர்ய காந்த்,விக்ரம் நாத், ஆகியோரை கொண்ட கொண்ட அமர்வு புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
அதனைப் பற்றி விவரம் முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெறும் வீரர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்குவது தொடர்பான பரிந்துரை அறிக்கையை பகத்சிங் கோஷ்யாரி கமிட்டி கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்திருந்தது. முப்படைகளில் பணியாற்றும் வீரர்கள் அவர்கள் ஓய்வு பெறும் தேதியை கணக்கிடாமல் ஒரே பதவியில், ஒரே கால அளவில் பணியாற்றியவர்களுக்கு ஒரே சீரான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
அரசின் கொள்கை முடிவுகளுக்குட்பட்டு ஓய்வூதிய கொள்கையை மத்திய அரசு வகுத்துள்ளது. அதில் அரசமைப்பு சட்ட மீறலும் இல்லை. அரசமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் அல்லது தன்னிச்சையான போக்கிலோ மத்திய அரசு செயல்படவில்லை. இந்த ஓய்வூதிய கொள்கையை கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியம் 2014 ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு கணக்கிட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஒரே பதவி ஒரே ஓய்வூதிய கொள்கையின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என பகத் சிங்க் கோஷியாரி பரிந்துரையில் கூறப்பட்டிருந்தது.
இந்த கொள்கை கடந்த 2015 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து 2019 இல் ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால் ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. எனவே தகுதியுடைய அனைத்து ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் மாற்றி அமைத்து கணக்கீட்டு அவர்களின் வங்கிக்கணக்கில் மூன்று மாதங்களில் செலுத்த வேண்டும் என நீதிபதி தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.