Categories
சினிமா

பிக்பாஸ் அல்டிமேட்: இந்த வாரம் எலிமினேட் இவரா இருக்குமோ?…. லீக்கான தகவல்….!!!!!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டோரில் ஒளிபரப்பாகிக் வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரம் கடைசி நாளில் ஒருநபர் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்படுவார்கள். அந்த அடிப்படையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் நிரூப், தாமரைச்செல்வி, சுருதி, அனிதா சம்பத் , ஜூலி, சதீஷ் போன்றோர் இடம்பெற்றுள்ளனர். இதில் சதீஷ் மட்டும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்து இருந்தார். இந்நிலையில் இந்த நாமினேஷன் லிஸ்டில் உள்ள 6 பேரில் சுருதி மற்றும் அனிதா சம்பத் இருவருள் ஒருவர் மக்கள் அளித்த ஓட்டிங் அடிப்படையில் வெளியேற அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் சுருதி முன்பே பங்கேற்ற பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தவறான முறையில் நாணயத்தை தாமரையிடம் இருந்து அபகரித்ததால் அந்த சீசனில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு சுருதியை பிடிக்கவில்லை.

எனினும் ஒரு சில பேருக்கு சுருதியின் தைரியமான மற்றும் துணிச்சலான விளையாட்டு பிடித்திருக்க வாய்ப்புள்ளது. அதைபோன்று பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில் பங்கேற்ற செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் தற்போது கலந்துகொண்டிருக்கும் அல்டிமேட் நிகழ்ச்சியில் தனது பெயரை டேமேஜ் ஆகி கொண்டு வருகிறார். ஏனெனில் திருமணமான பெண் போன்று நடந்து கொள்ளாமல் ஆண்களிடம் எல்லை மீறி பேசுவதும் அடிக்கடி நிகழ்ச்சியில் கெட்ட வார்த்தை பயன்படுத்துவதும் அனிதாவை பார்ப்பதற்கே புதிதாக தெரிகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் குறைத்து எடைபோடபடுக்கிற அனிதா சம்பத் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆக அதிக வாய்ப்புள்ளது. எனவே சுருதி மற்றும் அனிதா சம்பத் இருவருள் யாருக்கு குறைந்த ஓட்டுக்கள் கிடைத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகின்றனர் என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.

Categories

Tech |