ஸ்புட்னிக் வி தடுப்பூசி மீதான மதிப்பீடு தாமதமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியது. அதில் ரஷ்யாவில் தான் முதன் முதலாக கொரானா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஷியாவின் கமலேயா தேசிய தொற்றுநோய் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் தான் இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. அதன் பின் ரஷ்யா உட்பட 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு நம் நாட்டில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் பி தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இருப்பினும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்க, மேலும் சில தரவுகளை அதன் தயாரிப்பு நிறுவனத்திடம் உலக சுகாதார அமைப்பு கேட்டிருந்தது. அதன் பின் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. இந்த போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் தற்போது உலக சுகாதார அமைப்பு அவசரகால பயன்பாட்டிற்கான ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா வைரஸ் தடுப்பூசி மீதான மதிப்பீட்டை தாமதப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய ஆசியாவில் ஆய்வு செய்ய செல்ல இருந்த உலக சுகாதார அமைப்பு குழு ரஷ்யா தொடுத்துள்ள போர் காரணமாக போகவில்லை. இதனால் அவசர கால பயன்பாட்டிற்காக புதிய தடுப்பூசியை அங்கீகரிப்பது தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.