விற்பனை ஆலோசகர்கள் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் வைத்து நில உரிமையாளர்கள் மற்றும் விற்பனை ஆலோசகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜசேகர், பொருளாளர் முத்துக்குமார், செயலாளர் கோவிந்தராஜ், நிர்வாகி பூமிநாதன், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செயலாளர் கோவிந்தராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மன்னார்குடியில் நிரந்தரமான சார்பதிவாளர் இல்லாததால் பத்திர பதிவுகள் தாமதமாக நடைபெறுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே உடனடியாக நிரந்தரமான சார்பதிவாளரை நியமிக்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். இதனையடுத்து காலி பணியிடங்களில் நிரந்தர ஊழியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.