Categories
மாநில செய்திகள்

மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு பாலம்….. ரூ.6,000 கோடி செலவில்…. வெளியான தகவல்…..!!!!!

ஒரு திட்டத்தினை செயல்படுத்த வேண்டுமெனில் பல்துறை பங்களிப்பு தேவைப்படுகிறது. இந்த துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து சரக்கு போக்குவரத்துக்காக நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவே பிரதமரின் கதிசக்தி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையில் மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து ரூபாய் 6 ஆயிரம் கோடியில் ஈரடுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. தற்போது விரிவான திட்ட அறிக்கை தயார் நிலையில் இருக்கிறது. அந்த வகையில் இந்த சாலை சுமார் 20 கிமீ தூரம் கொண்டது.

இந்நிலையில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையிலான ஈரடுக்கு பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார். ரூபாய் 6 ஆயிரம் கோடியில் பாலம் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரவாயல் முதல் கோயம்பேடு வரை ஓரடக்கு பாலம், கோயம்பேடு முதல் துறைமுகம் வரை ஈரடுக்கு பாலம் என்று 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைய இருக்கிறது.

Categories

Tech |