Categories
உலக செய்திகள்

ஹிஜாப் விவகாரம்… நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றத்தை தருகிறது… அமெரிக்க வெளியுறவுத்துறை கருத்து…!!!

இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வருவது தொடர்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை குழு தலைவரான வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் கலோரிக்கு ஹிஜாப் அணிந்து வருவது தொடர்பில் பிரச்சனை ஏற்பட்டது. எனவே, இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் இது தொடர்பான தீர்ப்பு, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியானது.

கர்நாடக உயர்நீதிமன்றம், வெளியிட்ட தீர்ப்பில், ஹிஜாப் பிரச்சனையில் அரசாங்கம் பிறப்பித்த ஆணை, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சனையில் அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய அதிகாரம் கிடையாது. ஹிஜாப்பை, இஸ்லாமிய சமூகத்தில்  அவசியமானது என்று கூற முடியாது.

எனவே, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு வரும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதி கிடையாது. மாணவர்கள் அனைவரும் ஒன்று தான் என்பதை வலியுறுத்துவதற்காக தான் சீருடைகள் கொண்டுவரப்பட்டது. எனவே அனைவரும் சீருடைகள் அணிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் வெளியுறவுத்துறை தலைவரான கிரிகோரி மீக்ஸ், கல்வி மற்றும் மத உரிமை போன்றவற்றிற்கு இடையே கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தக்கூடிய வகையில் வெளியான நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றத்தை தருகிறது.

இந்தியா அல்லது அமெரிக்கா என்று எந்த நாடாக இருப்பினும் சிறுபான்மை சமூகத்தினரை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதை வைத்து தான் ஒரு சமூகத்தின் அளவுகோல் உண்மையாக மதிப்பிடப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |