உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கொண்டுவந்துள்ள மனிதாபிமான வரைவுத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென உறுப்பினர்களுக்கு ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா கொண்டுவந்துள்ள மனிதாபிமான வரைவுத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என ஐநா உறுப்பினர்களுக்கு ரஷ்யா வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் இன்று இந்த விவாத கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சூழலில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று மீண்டும் அவசரமாக கூடுகிறது. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், அயர்லாந்து, நார்வே, அல்போன்சா போன்ற 6 மேற்கத்திய மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஐநா கூட்டம் இன்று நடைபெறுகிறது.
அதில் உக்ரைன் விவகாரத்தில் வெளிப்படையான விவாதம் நடைபெற இருக்கிறது. மேலும் இன்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டதாக பிரிட்டன் தரப்பில் கூறப்பட்டு உள்ளதாவது, “ரஷ்ய போர்க் குற்றங்களை நடத்துகிறது. பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் ஏற்படுத்துகிறது. ரஷ்யாவின் இந்த சட்டவிரோத போர் அனைவருக்கும் ஆபத்தானது” என கூறப்பட்டுள்ளது.
ரஷியாவின் தீர்மானத்தில் பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக பல நாடுகள் கடுமையாக எதிர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மறுமுனையில் உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதாக வெளிவருபவை போலியான செய்திகள் என்று அரசு தரப்பில் தொடர்ந்து மறுப்பு கூறப்பட்டு வருகிறது.மேலும் இன்று நடைபெறும் கூட்டத்தில் ரஷ்யாவின் தீர்மானம் மீது முழுமையான விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.