மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதி விபத்து போலீஸ் ஏட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு காவல் நிலையத்தில் எட்டாக அபிமன்யு என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 2- தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அபிமன்யுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அபிமன்யு நேற்று பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அபிமன்யுவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் அபிமன்யுவின் உடலுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.