Categories
மாநில செய்திகள்

“என்னோட வாயை மூட முடியாது”….. திமுக கேட்ட கேள்வி…. புட்டுப்புட்டு வைத்த அமைச்சர் ஜெயக்குமார்……!!!!!

நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் 2 வாரங்களில் திங்கள் ,புதன், வெள்ளி போன்ற 3 நாள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் நேற்றைய முன்தினம் கையெழுத்திட்டார். அதன்படி இன்றைக்கு கையெழுத்திட்டுள்ளார். இதற்காக அவர் திருச்சியில் தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இதற்கிடையில் டெல்டா பகுதியிலுள்ள அதிமுக நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவரிடம் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் ரெய்டு தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாமல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகளைப்போட்டு பணம், நகை, சல்லி காசுகளைகூட கைப்பற்றாமல் அதனை கைப்பற்றியதாக சொல்வது பொய் என்றார்.

ஜாமீனில் வெளிவந்த ஜெயக்குமார் தொடர்ந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருப்பதாக திமுக ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு, நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் திருச்சியில் தங்கியிருந்து போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறேன். மற்றபடி எனக்கு பேட்டி கொடுக்கக்கூடாது என்று நீதிமன்றம் எந்தஒரு நிபந்தனையும் விதிக்கவில்லை. ஜெயக்குமாரின் வாயை யாரும் மூடவே முடியாது. மேலும் ஒன்றரை கோடி தொண்டர்கள் வாயை மூடவே முடியாது என்றார். முதல்வர் ஸ்டாலின் இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் என்று சொல்லுகிறார்களே என்ற கேள்விக்கு, இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக் என்று சொல்லிவிட்டு கிண்டலாகச் சிரித்தார்.

Categories

Tech |