அமெரிக்க துணை ஜனாதிபதியின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த தொற்றில் இருந்து விடுபட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது அனைத்து நாடுகளிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் அமெரிக்காவிலும் தடுப்பூசி செலுத்தும் பணியானது முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் கணவரான டக் எம்ஹொப்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனையடுத்து அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஷுக்கு கொரோனா தொற்று இல்லை என வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் கணவர் நலமுடன் இருப்பதாகவும்வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.