குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் பஞ்சு மூட்டைகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொன்னாங்காட்டு புதூரில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கணவன் மனைவி இரண்டு பேரும் சாப்பிட்டு விட்டு டீ போட்டு குடுத்துள்ளனர். இதனை அடுத்து தம்பதியினர் விறகு அடுப்பை அணைக்காமல் படுத்து தூங்கிவிட்டனர். நள்ளிரவு நேரத்தில் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் உடனடியாக வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதனையடுத்து தம்பதியினர் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்து 5 பஞ்சு மூட்டைகள், 2000 ரூபாய் பணம், பாத்திரம் மற்றும் துணிகள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.