கிணற்றில் விழுந்த லாரியை மீட்பு வாகனம் மூலம் மீட்டனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரியபுலியூர் தயிர்பாளையத்தில் இருக்கும் ஒரு தோட்டத்தில் அறுவடை செய்த கரும்புகளை சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்வதற்காக லாரியில் ஏற்றியுள்ளனர். இந்நிலையில் லாரி ஓட்டுனர் வாகனத்தை இயக்க முயற்சி செய்துள்ளார். அப்போது போது அதிக பாரம் இருந்ததால் தோட்டத்திலிருந்த கிணற்றுக்குள் லாரி சாய்ந்துவிட்டது.
இதனை பார்த்ததும் சுதாரித்துக்கொண்ட லாரி ஓட்டுநர் கிணற்றிலிருந்து வெளியே குதித்து உயிர் தப்பிவிட்டார். சிறிதுநேரத்தில் லாரி முழுவதும் கிணற்றுக்குள் மூழ்கிவிட்டது. இது குறித்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் ஈரோட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட மீட்பு வாகனம் மூலம் கிணற்றில் மூழ்கிய லாரியை மீட்டனர்.