Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“விவசாயிகள் கவனத்திற்கு” இங்கெல்லாம் நாளைக்கு பட்டா திருத்த முகாம் …. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் மாவட்டத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு கணினி பட்டா திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. அதைப்போல் நாளை (வெள்ளிக்கிழமை) மாவட்டத்தில் உள்ள பானான்வயல் கிராமம், அனுமந்தகுடி கிராமம், எஸ். வேல்ங்குடி கிராமம், உடையநாதபுரம் கிராமம், கிலங்காட்டுர் குரூப், கீழாயூர் கிராமம், பால்குளம் கிராமம் ஆகிய கிராமங்களில் கணினி பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பட்டா பிரச்சனைகள் குறித்த  கோரிக்கை மனுவை முகாமில் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |