இன்று நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை அறிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் 2022 – 23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை நடைபெற உள்ளது. இதில் மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை நிகழ்த்த இருக்கிறார். இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று இன்னமும் செயல்படுத்தப்படாமல் இருக்கும் முக்கிய வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மொத்தம் 505 வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக “நீட் தேர்வு ரத்து, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூபாய் 100 மானியம், மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை, மகளிருக்கு உரிமைத் தொகை மாதம் ரூபாய் 1000, முதியோர் ஓய்வு ஊதியம் ரூ.1,500, கல்வித்துறை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருதல்” போன்ற வாக்குறுதிகளை குறிப்பிட்டு சொல்லலாம். இதில் இல்லத்தரசிகளுக்கு உரிமை தொகையாக மாதம் ரூ1,000 வழங்கப்படும் என்கிற அறிவிப்பு நாளை நடக்கும் பட்ஜெட் உரையில் இடம் பெறலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என்பதால் மாநில அரசுக்கு பெருமளவு நிதி தேவைப்படும். ஒருவேளை இன்று பட்ஜெட்டில் உரிமைத் தொகை குறித்து அறிவிக்காவிட்டால் 5 சவரன் நகை கடை தள்ளுபடியில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை போல இதற்கும் விதிக்கப்படலாம் என்பதில் சந்தேகமில்லை. தேர்தல் பிரச்சாரத்தில் பொதுவாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 சவரன் வரையிலான நகைகளை தள்ளுபடி செய்வோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இறுதியாக ஒரே குடும்ப அட்டை, போலி நகைகள் , AAY குடும்ப அட்டை முறைகேடு போன்ற காரணங்களை கூறி 10,18,066 பேர் மட்டுமே நகைக் கடன் பெற தகுதியானவர்கள் என்றும் மீதமுள்ள 35 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது எனவும் அரசு உத்தரவிட்டது நினைவுகூரத் தக்கது ஆகும்.