விவசாயியை அரிவாளால் வெட்டிய தம்பியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உசிலாங்குளம் கிராமத்தில் விவசாயியான அண்ணாத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுன்துரை என்ற தம்பி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாக்குவாதம் முற்றியதில் பவுன்துரை அண்ணாதுரையை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அண்ணாத்துரையை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பிஓடிய பவுந்துரையை வலைவீசி தேடி வருகின்றனர்.