Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வானத்தைப் போல படத்தில் நடந்த சம்பவம்”… நெகிழ்ச்சியாக பகிர்ந்த விக்ரமன்…!!!

இயக்குனர் விக்ரமன் விஜயகாந்த் உடன் பணியாற்றிய போது ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவத்தை கூறியுள்ளார்.

90களில் முன்னணி இயக்குனராக வலம் வந்த விக்ரமன் புது வசந்தம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து படத்தை இயக்கி பல வெற்றிப் படங்களை தந்திருக்கின்றார். இவரின் படங்களை குடும்பத்தோடு பார்க்கும் படமாக இருக்கும். இவர் அண்மையில் செய்தியாளர் சந்திப்பின்போது விஜயகாந்த் பற்றி கூறியுள்ளதாவது, “வானத்தை போல படத்தின் கதையை விஜயகாந்திடம் கூறியபோது சண்டை காட்சிகள் எதுவும் இல்லை என்று கூறினேன்.

நீங்கள் ஆக்சன் ஹீரோவாக இருப்பதால் உங்களின் படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லாமல் எப்படி? உங்களுக்காக படத்தில் சண்டைக் காட்சியை வைத்து விடுகிறேன் என்று கூறினேன். அதற்கு விஜயகாந்த் எனக்காக கதையில் எந்த மாற்றமும் செய்யாதீர்கள். உங்கள் விருப்பப்படியே அதை அப்படியே அமையட்டும் என்று கூறினார். ஆனால் விக்ரமன் படத்தின் இறுதியில் சண்டை காட்சியை வைத்து முடித்துள்ளார். விக்ரமன், தனக்காக விஜயகாந்த் ஆக்சன் காட்சி வேண்டாம் என கூறியதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |