ஐஸ்வர்யாவின் பயணி பாடலை ரஜினிகாந்த் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா தற்போது தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. இவர் தற்போது முசாபிர் பாடலை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில் இவரின் தந்தையும் சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்த், ஐஸ்வர்யா இயக்கும் “பயணி” பாடலை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Happy to release #Payani , music single directed by my daughter Aishwarya , who is back to direction after a long gap of 9 years. I Wish you the very best always @ash_r_dhanush .. god bless .. love you .. https://t.co/x7jUP4upId
— Rajinikanth (@rajinikanth) March 17, 2022
9 ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இயக்குனராக உருவெடுத்த மகள் ஐஸ்வர்யா எடுத்த இந்த பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சியாக கருதுகிறேன் என ரஜினி தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யாவுக்கு கடவுள் அருள் புரிய அன்புடன் வாழ்த்தி இருக்கின்றார்.