ஆதார் எண்ணை தெரிவித்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின் “ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டம் கொண்டுவரப்பட்டிருந்தது. இதன் மூலம் நாடு முழுவதும் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. பணி நிமித்தமாக அடிக்கடி இடம் மாறுபவர்கள் கருத்தில் கொண்டே திட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மதிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் புலம்பெயர் தொழிலாளர்கள் வேறு இடங்களுக்கு செல்லும்போது ரேஷன் பொருட்களை வாங்க புதிய ரேஷன் கார்டு தேவை இல்லை. ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டின் பழைய எண்ணையோ அல்லது ஆதார் எண்ணையோ தெரிவித்து பயோமெட்ரிக் மூலம் அடையாளத்தை உறுதி செய்துகொண்டு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.
இதன் மூலமாக புதிய ரேஷன் கார்டு பெரும் பிரச்சினைக்கும், போலி ரேஷன் கார்டு பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியும். தொழில்நுட்பம் அடிப்படையிலான இந்த “ஒரே நாடு ஒரே ரேஷன்” கார்டு திட்டத்தால் இது சாத்தியமாகியுள்ளது என அவர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் “நாட்டிலுள்ள 77 கோடி மக்கள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற்றிருக்கின்றனர்”.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அரசின் சலுகைகளைப் பெறுவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த முயற்சி பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் அவர் பணிபுரியும் இடத்தில் உங்களை சலுகைகளை பெற முடியும். அதே சமயம் அவர் அல்லது அவரது குடும்பத்தினர் தங்களது சொந்த இடத்திற்கு திரும்பியபின் உரிமையுள்ள ரேஷன் கடைகளில் பாக்கைபெற அனுமதிக்கப்படுகிறார்கள் எனவும் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.