Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ஆக்கிரமிப்பு இடங்கள்” தொடரப்பட்ட வழக்கு…. நீதிமன்றத்தின் தீர்ப்பு…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

நீதிமன்ற உத்தரவின்படி புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் புறம்போக்கு இடங்களில் வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புறம்போக்கு இடங்களில் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை அகற்றுமாறு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின்படி  தாசில்தார் பழனிராஜன் தலைமையில் ஒரு குழு அரக்கோணத்திற்கு சென்றது. அதன்பிறகு ஆக்கிரமித்து இடங்களில் கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கடைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. மேலும் அந்தப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஒரு குழு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது.

Categories

Tech |